It’s my life

Archive for the ‘Uncategorized’ Category

தெலுங்கில் மரியாத ராமண்ணா என்று லோ பட்ஜெட்டில் வந்து ஹிட் அடித்த படம் கன்னடத்திற்கு போய் ஹிந்திக்கு போய் இப்போது தமிழுக்கும் வந்திருக்கிறது.

சென்னையில் சைக்கிளில் தண்ணி கேன் சப்ளை செய்யும் சத்யாவிற்கு (சந்தானம்) ஆட்டோ இல்லை என்ற காரணத்தினால் வேலை போகிறது. ஆட்டோ வாங்க காசுக்கு அலையும் சத்யாவிற்கு அவரது ஊரில் 5 ஏக்கர் பூர்வீக நிலம் இருப்பது தெரிய வர அதை விற்று ஆட்டோ வாங்க கிளம்புகிறார். ஆனால் அந்த ஊரில் அவருக்கு சொத்து மட்டும் அல்ல குத்தும் காத்து கொண்டிருககிறது. பழைய பகையினால் சந்தானத்தை போட்டு தள்ள வில்லன் க்ரூப் காத்து கொண்டிருகிறது, இது தெரியாமல் சந்தானம் அந்த வீட்டிலேயே அடைக்கலம் ஆகிறார். மனிதாபிமானமுள்ள வில்லனோ வீட்டிற்குள் ரத்தம் சிந்தக்கூடாது, அவன் காலடி வெளியில் வைத்தவுடன் போட்டு தள்ளுமாறு கூறி விடுகிறார். சந்தானம் எப்படி வீட்டிற்குள் இருந்தே சமாளிக்கிறார் என்பது தான் கதை.

படத்தின் நாயகன் மட்டும் அல்ல படத்தை காப்பாற்றுவதே சந்தானம், சந்தானம் மட்டுமே. மனிதர் அசால்ட்டாக காமெடி, ஹீரொயிஸம், ரொமான்ஸ் , செண்டிமெண்ட் என்று பட்டையை கேளப்புகிறார், என்ன இந்த பயத்தை மட்டும் காட்ட தெனருகிறார். பாடல்களில், டான்ஸ் மூவ்மேண்டில் அசத்துகிறார், அதுவும் ஒரு பாடலில் இளைய தளபதி போல் ஜிம்னாஸ்டிக் செய்யும் காட்சியில் தியேட்டர் ஆர்ப்பரிக்கிறது. இவரது வசனங்களும் பல இடத்தில வசீகரிக்கிரது:

“பொண்ணுங்களுக்கு ரசனை ஒவ்வொரு வயசுக்கும் மாறும், ஆனா பசங்களுக்கு எப்போவும் ஒரே ரசனை தான்”

“பெத்தவங்க பிரிச்சிடுவாங்கன்னு ஒரே நம்பிக்கையில் தான் பொண்ணுங்க காதலிக்குறாங்க”

“ரசம் வெக்கறவன் எல்லாம் ரகுவரன் மாதிரி பேசறான்”

ஹீரொயின் வழக்கமான தமிழ் சினிமா போல் வருகிறார் முறை மாமனுக்கு நிச்சயிக்க படுகிறார் ஆனால் ஹீரோவை காதலிக்கிறார். கடைசியில் முறைமாமனின் உதவியோடு ஹீரோவை கை பிடிக்கிறார்.

வில்லன் யாருப்பா அது ஜெயபிரகாஷ் போலவே இருக்கிறார். நடிப்பிலும் குரலிலும் அச்சு அசல் ஜெய பிரகாஷை பார்ப்பது போலவே இருக்கிறது. வழக்கமான வில்லனை போல பாசமான குடும்பஸ்தன் ஆகவும் அவனை போடுங்கடா என்று கொடூரமான வில்லனாகவும் வந்து போகிறார்.

RJ செந்தில், அவருக்கு கொடுக்க பட்ட சொத்தையான காரக்டரையும் சிவாஜி போல் நடித்து உயிரை வாங்குகிறார். இவர் ஹீரோவாக எல்லாம் நடித்தாராம் (எவ்வளவு தைரியம் ப்ரொட்யூசருக்கு?). இப்படியே தேர்வு செய்து நடித்தால் பிரசாந்த் ஸ்ரீ காந்த் வரிசையில் இடம் பிடிக்கலாம்.

ம்யுசிக் சித்தார்த் விபின் என்கிற மலையாளத்து காரர். எல்லோரும் இங்லிஷ் படத்தில் இருந்து இசையை சுட்டால் இவர் வித்யாசமாக தமிழ் படத்தில் இருந்து அதுவும் சமீபத்தில் வெளியான படத்தில் இருந்து இசையை சுட்டிருக்கிறார். ஒரு பாடலில் பிரியாணி பட தீம் ம்யுசிக்கை அப்படியே எடுத்து போட்டிருக்கிறார் (என்ன சார் இன்ஸ்பிரேஸனா?). சுளுவாக சொல்ல வேண்டும் என்றால் இசை சுமார். படத்தில் ஐவரும் ஒரு ரோலில் நடித்திருக்கிறார், ராஜ குமாரனின் அல்லக்கையாக வருகிறார். நடிப்பும் சுமார்.

பவர் ஸ்டார் சிறையில் இருந்ததால் ராஜ குமாரனுக்கு வாய்ப்பு கொடுக்க பட் டிருக்கிறது. மனிதர் அதையும் சொதப்புகிறார். இவரை விட ஒரு நிமிடமே வரும் பவர் ஸ்டார் கவர்கிறார். “போன பொங்கலுக்கு நான், இந்த சம்மருக்கு நீயா?”

இயக்கம் ஸ்ரீநாத் என்கிற தமாசு நடிகர் (தின மலர் எபெக்ட்). எல்லோரும் எதெதுக்கோ கிராபிக்ஸ் செய்ய இவர் அருவாள் வீச்சுக்கும், சுமோ பறப்பதர்க்கும், சைக்கிள் டைனமோவிற்கும் கிராபிக்ஸ் செய்கிறார். எவ்வளவோ நல்ல இயக்குனர்கள் இருக்க இந்த படம் இவர் கிட்ட போனது கொடுமை. (ஆனால் இவருக்கு முன்னாடி இந்த படத்தை எடுக்க இருந்தவர் R .கண்ணன், அவருக்கு இவர் எவ்வளவோ மேல்). முதல் அறை மணி நேரமும் கடைசி அறை மணி நேரமும் கழித்து பார்த்தால் மீதி படம் ஓரளவு நன்றாகவே இருக்கிறது.

ஆக மொத்தத்தில், சந்தானத்தை மட்டுமே நம்பி எடுக்கப்பட்ட படம், சந்தானமும் கிடைத்த பாலெல்லாம் சிக்ஸர் அடித்து அசத்துகிறார். ஆனால் ஒருவர் மட்டுமே அடித்து அணியை காப்பாற்றமுடியாதென்பது பரிதாபம்.

Advertisements

 சார்  படம் பார்க்கும் போது என் பக்கத்துல பொண்ணு இருந்தாதான் நான் படத்தை பார்ப்பேன் சார்….

 என்ன மாதிரி பொண்ணுன்னு சொல்லுங்க….

 அதுவந்து  சார்… சுமாரான பொண்ணா இருந்தாலும் பரவால சார்…. அப்படின்னா…??

படத்துக்கு பாய் பிரென்டோட வரலாம்.. ஆனா பாப் கார்ன் எனக்கு தான் வாங்கி தரனும் .. கடைசியா  சந்தோஷமா படம்  முடியுனும்…

பொண்ணுங்க வர்ற மாதிரி தியேட்டர்ல இந்த படம் ரிலீஸ் ஆகாது… அதனால் பொட்டியை கட்டிக்கிட்டு கிளம்பு…

படத்தோட  ஒன்லைன் ரொம்ப சிம்பிள்.. தமிழ்ப்படம்…

நிறைய சில்லறை கலெக்ட் பண்ணிக்கிட்டு ஸ்கிரிப்ட் எழுத உட்கார்ந்து இருக்கானுங்க… அவ்வளவு சில்லறைத்தனம்.

இந்த மாதிரியெல்லாம் படம் எடுக்க முடியுமான்னு நெனைச்சு மிரண்டு போயிடுவிங்க…
வெடி படம்.. பெரிய அளவுல போலிஸ்காரங்களையும் அவங்க குடும்ப பிரச்சனையும்… அவங்கள கடத்தும் போது பாதிக்கப்படும் அப்பாவி கடத்தல்காரர்களின் வாழ்க்கை சம்பவங்களை பற்றி அதிகம் பேசிய படம்… அதில் இருக்கும்  அந்த கான்செப்ட்டை அலெக்ஸ் பாண்டியன் படத்தில் பார்த்தோம்…

இங்கே படம்  நிறைய ஜூனியர் ஆர்டிஸ்ட்ஸ்… இடைவேளைன்னு போடும் போது  படம் பரபரப்பாகின்றது… அதில் இருந்து படம் முடியும் வரை சான்சே இல்லை.. நல்ல தூக்கம்.

எவ்வளவு ஷாட்.. எல்லாம் மொக்க ஷாட்டுதான்..  மூணு மணி நேரம் … அதன் டிராவல்… ஹீரோ ஹீரொயின் டிரஸ்  சேஞ்சிங்ன்னு உசிர வாங்குறாங்க…  நமக்கே இப்படி இருக்கே ப்ரொஜெக்டர ஓட்டுர மனுஷன நினைச்சு கண்ணு கலங்குது… ஒரு வாரம் கூட தாண்ட  முடியாத படம் …

மும்பை தீவிரவாத தாக்குதலின் மூளை ஆக செயல்படும் டேனியலை என்கௌண்டர் செய்கிறார் DGP சுந்தரபாண்டியன். நகரம் சுத்தமாகிவிட்டது என்று அவர் பெருமூச்சு விடும் போது புயல் போல் வருகிறார் நம் தலைவன். திடீரென்று கண்ணில் படும் எல்லோரையும் போட்டு தள்ளி கொண்டிருக்கிறார். யார் இவர்? இவர் திட்டம் என்ன? என்பது தான் கதைன்னு நினைக்கிறேன்….

தியேட்டரில் படம் பார்க்க வந்த அத்தனை பேரும் உயிரை பணயம் வைத்து வந்து இருக்கின்றார்கள்… அல்லது அது போல நிலைமைக்கு ஆளாக்கியது படம் எடுத்தவர்களுக்கு கிடைத்த வெற்றி.

சுவாமிநாதனை பார்த்து சந்தானம் ‘யார்ரா இவன் எருமை மாட்டுக்கு ஏர்வாமாடின் தடவுன மாதிரி இருக்கான் ” என்று சொல்லும் அந்த சீன் ஹா ஹா ஹா அசத்தலான வசனம்…

ஒரு சில படங்களை ரொம்பவும் விளக்க முடியாது.. அனுபவிச்சா தெரியும் அது போல திரைப்படம் தான் பாஸ் in தலைவன்…

 கிளைமாக்ஸ் பின்னி இருக்கானுங்க.. அருமை போங்க..தியேட்டருல யாருமே இல்ல …

இந்த படத்தை இயக்கி இருப்பது தமிழ் நாட்டின் தவிர்க்க முடியாத இயக்குனர் ரமேஷ் செல்வன் மொக்கை கதைகளை எடுப்பதில் ஒரு ஸ்டைலிஷான  இயக்குனர்… தமிழ் நாட்டின் குவாடின் (யாருப்பா அது?)  என்றும் சொல்லலாம்..

 நம்ம ஊர்  இயக்குனர் கங்கை அமரன் போல நடிக்கவே தெரியாத ஹீரோவ வச்சிக்கிட்டு படம் எடுப்பார் என்று இவர் மீது குற்றச்சாட்டு உண்டு…

ஆனா நடிக்க தெரியாத ஹீரோனா … படம் எடுத்து தள்ளிக்கிட்டு போய்க்கிட்டு இருக்கலாம் இல்லையா? அதைதான்  இனி எல்லா படத்திலேயும்  பின் பற்றுவாறு .

ஹீரோவின் டார்ச்சர் தாங்க முடியாம அவரை ஹீரோயின் அறைந்ததும் துடித்து போய்  வேறு பெண்ணை பாத்து ஹீரோ சிரிக்கும் காட்சி பரபரப்பு…

யாரும் பார்க்காத  அந்த கிளைமாக்ஸ் பைட்.. அருமை.

======
படத்தின் டிரைலர்..

 
பதினெட்டு வயசுக்கு மேல ஆனவங்க youtube போய் தேடி பாத்துக்கோங்க. லிங்க் எல்லாம் குடுக்க முடியாது.

= = = = =
படக்குழுவினர் விபரம்

ரொம்ப முக்கியம் !

= = = = =
வாழ்கையிலே பிரச்சனைன்னு தற்கொலை பண்றதுக்கு  வெறித்தனமா இருக்கற இளைஞ்ர்களுக்கு   நான் இந்த படத்தை பரிந்துரை செய்வேன்.  

சான்சே   இல்லை… இந்த படம் பார்த்தே தீரவேண்டிய திரைப்படம். (பாக்கலேன்னா என்ன ஆகும்னு கேக்காதீங்க…பாருங்க தீந்துடுவீங்க)

கடை சாத்தர நேரம் அடிச்சி பிடிச்சி ஒரு குவோடடர வாங்கி கை நடுக்கத்தோட மூடி திறக்கும் போது கீழ விழுந்து உடையும் அந்த தருணம் விரக்தியில் அழுகை அழுகையா வருமே அது போல படம் முடியும் போது a film by ரமேஷ் செல்வன் என்று போடும் போது கண் வேர்க்கிறது.

=====
படத்தோட ரேட்டிங்
ஏழரை …

====.

கருத்து சொல்வது  அல்ல நீ
கழுத்தருப்பதே  நீ…..
அர்நால்ட் ஆறுமுகம்

 

ஏன் கேக்குறன்னா, வருத்தப்படாத வாலிபர் சங்கம் படத்துல வர்ற ஒரு சீன் அப்படியே அச்சு பிசகாம என் வாழ்க்கையில் நடந்திருக்கு. ஒரு வேளை  டைரெக்டர் பொன்ராம் இந்த ஊர் காரரா இருக்குமோ, இல்ல சிவ கார்த்திகேயன், சூரி சைடுல?

அது என்ன சீன்னு சொல்லுறதுக்கு முன்னாடி கொஞ்சம் என்ன பத்தி சொல்லிடுறேன், அப்போதான் ஒரு  ஃப்லோ  கிடைக்கும். என் வாழ்க்கையிலே LKG முதல் மேற்படிப்பு வரை எல்லாமே என் வீட்டுல இருந்து ரெண்டு கிலோ மீட்டர் சுத்து வட்டாரத்துலையே முடிசிருச்சு.  நான் ஒரு கிணத்துத்தவளை. கழுதைக்கு குட்டிச்சுவறு மாதிரி, ஒனானுக்கு வேலி மாதிரி எனக்கு துனையா இருந்தது என் உயிர் நண்பன் அரவிந்த் (பெயர் மாற்றப்படவில்லை). இன்னைக்கு வரைக்கும் என் உயிரை வாங்கிகிட்டு இருக்கான். ரெண்டு பெரும் ஒரே வீடு (மாதிரி, ஆனா பக்கத்து வீடு), ஒரே ஸ்கூல், ஒரே கிளாஸ், ஒரே பெஞ்ச் (எத்தனை!!). கிளாஸ்ல ரொம்ப அடக்கமான பசங்க, எவ்வளவு அடக்கம்னா நாங்க கிளாஸ்ல இருக்கறதே யாருக்கும்  தெரியாது.இத ஒரு உதாரணத்தோட  சொன்னா  உங்களுக்கு புரியும்.

ஸ்கூல் வாழ்க்கை முடிஞ்ச அன்னைக்கி எல்லோரும் எல்லோர் கிட்டயும் ஸ்லாம் புக்குல கையெழுத்து வாங்கிகிட்டு இருந்தாங்க. அப்போ கிளாஸ்ல நாலஞ்சு அழகான பொண்ணுங்கலுல ஒரு பொண்ணு என்கிட்டே கையெழுத்து வாங்க வந்துச்சு, நானும் புக்க புடுங்கி போட போகும்போது (கையெழுத்துதான்!)  சாரி தெரியாம கொடுத்துட்டேன் நான் எங்க கிளாஸ் பசங்க கிட்டதான் வாங்கனும்னு அந்த புள்ள சொல்லிட்டு புக்க திருப்பி வாங்கிருச்சு. ஏம்மா நான் உன் கிளாஸுதான் எட்டாவதுலேருந்து நாம ஒன்ன தானே படிக்குறோம்னு சொன்னதுக்கு அப்படியா நான் உங்கள பாத்ததே இல்லையே, உங்க பேர் என்னனு கேட்டுச்சு. இப்போ புரிஞ்சதா எவ்ளோ அடக்கம்னு.

அப்படி நாங்க அப்பவியா இருக்கறச்சே , எங்களுக்கு ஒரு ஆசை எப்படியாவது எங்க ஏரியாவுல இருக்குர  ரஜினி ரசிகர் மன்றத்துல சேரனமுன்னு. ஆனா என்ன பிரச்சனைனா அந்த மன்றத்துல இருந்தவங்க எல்லோரும் சீனியருங்க, படிச்சு முடிச்சிட்டு வேலைக்கு வெய்ட் பண்றவுங்க, அவங்க கிட்ட பொய்   சேத்துகோங்கன்னு கேக்குறதுக்கு கூச்சம் (பயம்).

சரி, கேக்குறதுக்கு முன்னாடி அவங்க ரெகுலரா என்ன பன்றாங்கன்னு வாட்ச் பண்ணுவோம்னு முடிவு பண்ணுனோம் . ஒரு பதினஞ்சு பேரு (அப்பா முப்பதுன்னா ரெண்டா?) இருந்தாங்க, டெய்லி காலையிலே ஃஷார்ப்பா 10 மணிக்கு எல்லோரும் ஆஜரானாங்க. அப்புறம் ஒரு குருப்பு  கேரம் போர்டு ஆடுனாங்க, ஒரு குருப்பு சீட்டு ஆடுனாங்க, இன்னொரு குருப்பு அரட்டையடிசிட்டு இருந்தாங்க. இது போக கட்ட பஞ்சாயத்து தனியா ஓடிட்டு  இருந்தது. இதெல்லாம் சாதாரண நாளிலே ஆனா தலைவர் படம் எதாவது ரிலீஸ் ஆகுற டைம்ல அப்படியே திருவிழாக்களை கட்டிரும். ரெண்டு மாசத்துக்கு எல்லோரும் பம்பரமா சுத்துவாங்க (யாரு சுத்தி விடுவான்னு சில்லியா கேக்காதிங்க).

இது போக அம்மன் கோயில் திருவிழா, கோடை காலத்துல நீர்மோர் பந்தல், ரத்த தானம்ன்னு ஓரளவு வருஷத்துக்கு ஏழெட்டு மாசம் சுறுசுறுப்பா இருக்கும்.

ஒரு நல்ல நாளிலே நாங்க அந்த மன்றத்துல இணைந்தோம். எங்களுக்கு ஒரே ஆச்சர்யம் எப்படி எங்கள சேத்தாங்கன்னு, அதுக்கு பதில் அடுத்த மாசம் நீர் மோர் விநியோகம் அப்போ கிடைச்சது. நாங்க மாட்டுக்காரங்க கிட்ட போயி மோருக்காக கால் கடுக்க நின்னு ரெண்டு மணி நேரம் கழிச்சி அவரு கொடுக்குற மோர வாங்கிட்டு வந்து அதுல தண்ணிய கலந்து, கொத்தமல்லி, உப்புன்னு அவங்கவங்க சொல்ற வித்யாசமான இங்ரெடியன்ஸ் போட்டு கலக்கி பானையிலே ஊத்தி அத சைகிள்ளே எடுத்துட்டு வெயில்ல லொங்கு லொங்குன்னு மிதிச்சிட்டு போவோம், அவங்க அலுங்காம அத விநியோகம் பண்ணி நல்ல பேரு வாங்கிகிட்டாங்க. இது வேலைக்காகாதுன்னு அங்க இருந்து சொல்லாம கொள்ளாம (அப்படின்னா?) எஸ்கேப் ஆனோம். வீட்டுல இருந்தா கண்டுபுடிச்சி இழுத்திட்டு பொயிருவாங்கன்னு சொல்லி நொய்யல் ஆத்தோரம இருக்குற பாட்டி வீட்டுல போய் செட்டில் ஆனோம்.

சரி அதுதான் ஃபிளாப் ஆயிருச்சுன்னு நம்ம ரேஞ்சுக்கு அடுத்த லெவல் ஹீரோவோட மன்றத்துல எதுலயாவது சேரலாம்னு எங்க தேடல்ல கிடைச்சது தான் பூவே உனக்காக விஜய் நலப்பணி சங்கம். அதுல இருந்தது ரெண்டு பேரு, ஒருத்தரு தலைவரு இன்னொருத்தரு செயலாளர். நாங்க அங்க போன நேரம் அவங்க கை பத்தலேன்னு (எதுக்கு?) யோசிச்சிட்டு இருந்த நேரம். கொஞ்சம் கூட யோசிக்காம டக்குனு ஃபார்ம்  குடுத்து சேத்திகிட்டாங்க.

அந்த சங்கத்துல நாங்க இருந்த அந்த ஆறு மாசமும் சொர்க்கம். பள்ளி கூடம் முடிச்சு சாயங்காலம் அங்க போறது கேரம் போர்ட் ஆடுறது, விஜய் படம் ரிலீஸ் ஆகும் போது டெய்லி தியேட்டருக்கு போறதுன்னு குதூகலமா போச்சு. ஆனா அதுக்கும் ஒரு கிளைமாக்ஸ் வந்துச்சு.

ஒரு நாள் நாங்க சங்கத்துக்கு போயி சைக்கிள் நிறுத்தும் பொது உள்ள கசமுசா ன்னு ஒரே சத்தம். என்னடா அமைதி பூங்காவான நம்ம சங்கத்துல்ல எதாவது ரெய்டு வந்துருச்சான்னு அவசரமா உள்ள போனா தலைவருக்கும் செயலாளருக்கும் சண்டை. என்ன பிரச்சனைனா செயலாளருக்கு கல்யாணம் நிச்சயம் ஆயிருச்சு, சோ, பத்திரிக்கையிலே (துக்ளக் இல்ல, கல்யாண பத்திரிக்கை) செயலாளருன்னு போடறத விட தலைவருன்னு போட்டா ஒரு கெத்து வருமுல்ல, அதனால டெம்பொரவரியா தலைவரா இருக்கேன்னு சொல்ல அதுக்கு நடப்பு தலைவரு முடியாது இந்த சங்கத்த பொறுத்த வரை நான் தான் நிறுவனர் நான் தான் தலைவருன்னு சொல்ல பெரிய தகராறு ஆயிருச்சு.

செயலாளர் கடுப்பாயி ஏன்டா நீ தலைவரா இருப்பே உனக்கப்புறம் உன் பையன் தலைவராவான் அதுக்கப்புறம் உன் பேரன் வருவான் ஆனா நான் மட்டும் கடைசி வரை செயலாளராவே இருந்து செத்து போகணுமா அப்படின்னு வாதாட அது பெரிய சண்டை ஆயி, லெட்ஸ் மேக் இட் ஃஷார்ட் (நான் எதையும் நேரா சொல்ல விரும்பல சுத்தி வளைச்சே சொல்லுறேன்!!) சங்கம் உடைஞ்சது. சங்கத்துல இருந்த ரெண்டு ஆடுகளும் வெவ்வேறு பாதையிலே போக நாங்க நடுவுல பூந்து வெளிய வந்தோம்.

அப்புறமென்ன செயலாளர் அடுத்த வாரத்துலயே இன்னொரு முட்டுசந்துல காதலுக்கு மரியாதை விஜய் மக்கள் இயக்கம்ன்னு ஆரம்பிச்சு கல்யாணம் பண்ணிகிட்டாரு (ஃபங்க்ஷ்ன்ல லைட் ம்யூசிக்ல போட்ட மொதல் பாட்டு ‘உனக்கென்ன மேலே நின்றாய்’). அதுல இருந்து நாங்க வேரெந்த மன்றத்துலயும்  சேர்ரதுக்கு சந்தர்ப்பம் அமையல.

இப்போ அந்த ரெண்டு பெரும் எங்க இருக்காங்கன்னு தெரியல, ஆனா அந்த சங்கம் இருந்த இடம் டாஸ்மாக் ஆயிருச்சு.

 

//

ரசிகர்கள்ள  என்னடா  போலின்னு வியக்காதிங்க (புது வார்த்தையா ??), நிமிர்ந்து நில் படத்துல நம்ம சுப்பு பஞ்சு சொல்ற மாதிரி நம்ம நாட்ல எல்லாத்துலயும் போலி இருக்கு, போலிக்கு மட்டும் தான் இன்னும் போலி வரல (இதெல்லாம் வசனமா??)

எனக்கு தெரிஞ்சு ரெண்டு வகையான போலி ரஜினி ரசிகர்கள் இருக்காங்க. முதல் வகை யாருன்னா  ஐடி, பிபிஒ  (தமிழ்ல b க்கும் p க்கும் வித்யாசம் இல்லை) கம்பனில்ல வேலை பாக்குறவங்க ஒரு ஸ்டைல் ஸ்டேட்மென்ட்டா  “இ ஏம  எ டை ஹார்ட்  ரஜினி ஃபேன் யார் “ன்னு சொல்லிட்டு திரிவாங்க. மெய்னா  என்ன பன்னுவாங்கன்னா ரஜினிகாந்த் ஜோக்ஸ்ன்னு பழைய சக் நோர்ரிஸ் ஜோக்ஸ் எல்லாம் ரீஹாஷ் பண்ணி மெயில், எஸ் எம் எஸ், ட்விட்டர் ன்னு பார்வோர்ட்  பண்ணிட்டு திரிவாங்க. இவங்கள பத்தி கவலை பட வேணாம், இவங்கெல்லாம் டெம்பரவரி வேற ஆள் கெடைச்சா உடனே மாறிடுவாங்க (சார் ரவீந்திர ஜடேஜா).

விக்கிபீ டியாவுல ரஜினிய பத்தி படிச்சுட்டு தீவிரமான ரஜினி ரசிகர்கள்ன்னு சீன போடுவாங்க. இவங்கள டெஸ்ட் பன்னமுன்னா  ரஜினியோட நூறாவது படம் எதுன்னு கேளுங்க கரெக்ட்டா சொல்லுவாங்க ஆனா தொன்னுத்தி ஒன்பதாவது படம் என்னன்னோ இல்ல மன்னன்ல ரஜினி பேர் என்னன்னு கேளுங்க, முழிப்பாங்க
(ஏனா இது விக்கில்ல  இல்ல).

இன்னொரு வகை இருக்கு ரஜினியோட தீவிரமான ரசிகர்கள்னு சொல்லிட்டு அவருக்கு லெட்டெர் மாதிரி ஒன்னு எழுதிட்டு அத அவருக்கு போஸ்ட் பண்ணாம ப்லாக்லயும் பத்திரிக்கையிலும் போட்டுட்டு அலப்பரை கொடுப்பாங்க. (எ. கா:- http://blog.nilavan.net/2008/08/blog-post_12.html). இவங்க தான் ரொம்ப  ஆபத்தானவங்க (வெரி டேன்ஜெரஸ் ). ஏன் பாஸ் ஒருத்தருக்கு லெட்டெர் எழுதினா அத அவருக்கு அனுப்புவிங்களா  இல்ல உங்களுக்கு சவுகிரியமான எடத்துல போட்டுட்டு பதில் சொல்லுங்கன்னு டார்ச்சர்  கொடுப்பீங்களா ?. அவரு என்ன டெய்லி ஒவ்வொரு பதிவுக்கும் வந்து நமக்கேதும் லெட்டெர் வந்திருக்கான்னு பாக்க சொல்லுறீங்களா ?.

இந்த மாதிரி லெட்டெர்லெல்லாம் முத்து முத்தா கருத்து சொல்லுவாங்க, கொஞ்சம் அத பத்தி பாக்கலாம்:

ரசிகர்களுக்காக என்ன பண்ணுனீங்க:

அதாவது இவங்க முதல் நாள் படத்த படத்தபாத்துடாங்கலாம் அதனால ரஜினி இவங்களுக்கு பொன்னாடை போர்த்தி மரியாதை செய்யணுமாம்.  ரசிகர்கள்கிட்ட எதையாவது எதிர்பாக்குறவங்க உண்மையான தலைவர் இல்ல, அதே மாதிரி தலைவர் கிட்ட எதையாவது எதிர்பாக்குறவங்க உண்மையான ரசிகர் இல்ல. அவரு உண்மையான தலைவரு, நீங்க?

நீங்க கண்டிப்பா படத்த பாக்கணும்னு என்னைக்காவது சொல்லி இருக்கிறாரா , அவரு ரசிகர்கள் கிட்ட சொல்லுறதெல்லாம் பெற்றோர்கள நல்ல பாத்துகோங்க, குடும்பத்த கவனிங்க மத்ததெல்லாம் அப்புறம்தான். அவரு கடமை நல்ல படமா நடிக்குறது, நம்ம கடமை அத பாக்குறது, அத விட்டுட்டு ரசிகர்களுக்கு எதுவும் செய்யல, ரஞ்சிதாவுக்கு ஏதும் செய்யல்லன்னு சொன்னா அவரு என்ன பண்ணுவாரு.

உதாரணமா இப்ப மைகேல் ஜாக்சன் இருந்தாரு (மொதல்ல இருக்காருன்னு அடிச்சிட்டேன்) உலகத்துல யாருக்குமே அமையாத ரசிகர் பலம் அவருக்கு அமைஞ்சது, ஆனா அவங்க எல்லாம் என்ன அவருகிட்ட ரசிகர்களுக்கு என்ன பண்ணுனிங்க ன்னு கேட்டுட்டு இருந்தாங்களா.

ஏன் குரல் குடுக்கல/ ஏன் குரல் குடுத்தீங்க:

ஏதோ ஒரு பிரச்சனைய எடுத்துக்க வேண்டியது அதுக்கு ஏன் குரல் கொடுக்கலன்னு கேக்க வேண்டியது, அப்படி ஒரு வேளை அவரு அந்த விசயத்த பத்தி அறிக்கை விட்டுருந்தாருணா ஏன் இதுக்கு மட்டும் குரல் குடுக்கறீங்க ஏன் அதுக்கு கொடுக்கலன்னு கிராஸ் பண்ண வேண்டியது.

தெரியாம தான் கேக்குறேன் (தெரிஞ்சா  நீ ஏன் கேக்க போறே?) பெரிய மனுஷனா இருந்தா எப்பவுமே ஏதாவது பத்தி கருத்து  சொல்லிகிட்டே இருக்கனுமா? ஏன் போயி அப்துல் கலாம் கிட்ட கேக்க வேண்டியது தானே ஏன் காவேரி பிரச்சனைய பத்தி பேசல, முல்லை  பெரியார் ஆணை பிரச்சனைய பத்தி பெசலைன்னு. அவரும் தமிழர் தான் , பெரிய பதவியுல இருந்தவரு, கணிசமான ரசிகர்கள் வெச்சிருக்காரு, ஆனா அவருகிட்ட மட்டும் ஒரு பிட்டி கேக்குறதில்ல.

 குரல் கொடுக்கல உரல் கொடுக்கல்லன்னு எதையாவது பொலம்பிட்டு இருக்காதிங்க.

அரசியலுக்கு வரேன்னு சொல்லிட்டு ஏன் மக்களை  கன்புயூஸ் பன்றீங்க:

அரசியல் என்ன சாதாரண விஷயமா டபக்குன்னு குதிக்குறதுக்கு, அதுக்கு எவ்வளவு ரஃப்னஸ் வேணும் (விஜயகாந்த் மாதிரி), நம்ம ஆளோ சாஃப்டானவரு. மேலும், அரசியலுக்கு வரனமுன்னா  வெட்கம் மானம் ரோஷம் தொஷம்ன்னு எல்லாத்தையும் வாசல்ல குழி தோண்டி பொதச்சிட்டு தான் வர முடியும்.

அரசியலுக்கு வர்றது வராதது அவரோட சொந்த விஷயம்/பிரச்சனை, நீங்களோ நானோ கவலை பட வேண்டியது இல்ல. வந்தா சந்தோசம் வரல்லேன்னா ரொம்ப சந்தோஷம்ன்னு நெனைக்குரவந்தான் உண்மையான ரசிகன்.

படம் வரும்போது மட்டும் ரசிகர்களை சந்திக்குறது:

இது வரை எந்த படதுக்காவது தலைவர் ப்ரொமோஷன் பண்ணி பாத்துரிக்கிங்களா? அப்படியே பண்ணாலும் படத்த பாருங்க ரசிங்கன்னு சிம்பிள சொல்லுவாரே தவிர இப்போ வர்ற இன்டு  இசுக்கு (என்னடா அர்த்தம்?) மாதிரி வித்யாசமான படம் வித்யாவோட படம், தமிழ் சினிமாவின் மைல் கல், பொங்கல்ன்னு உசிர வாங்கமாட்டாரு .

அவரே பாவம் படம்  ரிலீஸ் ஆகும் போது மூட்டை முடிச்ச கட்டிக்கிட்டு இமய மலை பக்கம் பொயிடுரர்ரு.  டெய்லி சந்திக்கனும்னு அவசியம் இல்ல, அதுக்கு ஒரு சந்தர்ப்பம் அமையனும் அது படம் ரிலீஸ் அப்போ பண்னறாரு அதுல என்ன தப்பு.

கடைசியா, நீங்க கீழ சொல்லுற இதெல்லாம் பண்ணியிருந்தா

* அவரோட பொறந்த நாளைக்கு ஸ் வீட் குடுத்திருகீங்களா  (ஆபீஸ்லயோ, காலேஜ்லையோ)

* அவரோட 5 படத்தயாவது மொத நாள் பாத்திருக்கீங்களா  

* டிவி ல ஈஜினி படம் போடும் பொது ஒரு எடத்துலையாவது உங்களுக்கு புல்லரிச்சிருக்கா  

* லிட்டில் சூப்பர்  ஸ்டார் கட்டில் சூப்பர்  ஸ்டார்ன்னு பிளாக்கி பசங்க எல்லாம் பேர் போடும் பொது கடுப்பாயிருக்கீங்களா  

* அடுத்த சூப்பர்  ஸ்டார்னு எதாவது புள்ள பூச்சிய ஏத்தி விடும் போது அவங்களுக்காக பரிதாபபட்டிருககீங்களா

* முதல் நாளே ஆடியோ காசெட்டோ/ சிடியோ வாங்கி அன்னைக்கி ஃபுல்லா அதையே கேட்டுட்டு இருந்திருக்கீங்களா

* ரஜினி படத்த கவர்ல போட்ட ஒரே காரனத்துக்காக பாடாவதி பத்திரிக்கை  வாங்கி படிச்சிருக்கீங்களா  

* உங்க வாழ்கையிலே எதாவது தருனத்தில ரஜினி படத்த பர்சுலையோ இல்ல உங்க மொபைல் / கம்ப்யூட்டர் வால் பேப்பரா வச்சிருக்கீங்களா.

நீங்க உண்மையன ரஜினி ரசிகர் பாஸ், நீங்கள் என் இனம்.

டிஸ்கி:

இன்னும் நிறைய இருக்கு, பதிவு ரொம்ப நீளமா பொயிட்டதுனால, ஏற்கனவே வந்துட்டு இருக்குற அந்த ஒன்னு ரெண்டு பேர் (அந்த ஒன்னு நான்தான்) நலன் கருதி மீதிய அடுத்த பாகம எழுதல்லாம் ன்னு பாக்குறேன் (தம்பி, டீ இன்னும் வரல).

 

“நேஷனல் அவாரடு வாங்குன யாரும் உருப்பட்டதா  சரித்தரம்  இல்ல”
                              —-பத்ம பூஷன் டாக்டர் கமல ஹாசன்

               யாரும் பதட்டப்பட வேண்டாம் இது கமலஹாசன் சொல்லல ஆனா அவரு சொல்லி இருக்க வேண்டியது, அவரு சொல்ல மாட்டாரு ஏனா அவரே 3 தடவை வாங்கியிருக்கார்

               வருஷா வருஷம் இந்த அவார்டு அறிவிக்கும் போதெல்லாம் கடுப்பாகுதே ஏன்?. அவார்டு “jury” ல இருக்குற ஒருத்தரு நம்ம தங்கர் பச்சன் (ஒரு சோறு பதம்…)

நேஷனல் அவார்டு வெப்சைட் போயருக்கிங்களா கொஞ்சம் கூட கூச்சம் இல்லாம “this is equivalent to america’s academy award” நு போட்டிருப்பாங்க. அத மட்டும் ஸ்பீல்பேர்கோ காமேரூனோ பாத்தாங்க அன்னைகுதாண்டி  கிளைமாக்சு.

இப்போ  தான்  “கற்றது  தமிழ்” ராம் திருந்தலாம்னு யோசிக்கும் போது அவார்ட குடுத்துட்டாங்க இனி எங்க அவரு உருப்படியா படம் எடுக்க போறாரு தங்க மீன்கள் தகர மீன்கள்னு எதையாவது எடுத்துட்டு பதிவுலகதையும் பத்திரிக்கையும் திட்டிகிட்டு இருக்க போறாரு.

பாலு மகேந்திரா அவர்டுக்குனே வாக்கபட்டவரு. அவரோட படம் அவார்டு வாங்கலேனா தான ஆச்சர்யம், ஏனா அவரு அவர்டுக்காகவே தான் படம் எடுத்தாரு. உங்க மனசாட்சிய தொட்டு சொல்லுங்க ‘தலைமுறைகள்’ நல்ல படமா? இதே கருத்த கிட்டத்தட்ட சொன்ன ‘பசங்க’ நல்ல படமா?

இந்த பதிவ எழுத காரணம் தகுதி இல்லாதவங்க நேஷனல் அவார்ட்வாங்குனது இல்ல , அத பத்தி எல்லொரும் பெருமையா பேசறது தான் காரணம்.

15 வருஷம் முன்னாடி எங்க வீட்ல கல்கி பத்திரிகையிலே ஒரு நாள் புரட்சி கலைஞர் கவரோட வந்துச்சு. அதுல அவரு சொன்னது தான் “அவார்டெல்லாம் ஹம்பக்” . எனக்கு அது இன்னும் ஞாபகம் இருக்க காரணம் அந்த வார்த்தைய நான் அப்பொ தான் கேள்விப்பட்டேன் (அவரு எப்போ கேள்விபட்டாரோ?). எந்த நாதாரியோ அவரு கிட்ட உங்களுக்கு ஏன் இன்னும் அவார்டு குடுக்கலேன்னு கேட்டுருக்கான், அதுக்கு தலைவரோட பதில் தான் இது.

கொஞ்சம் யோசிச்சு பாருங்க போன வருஷம் வந்த படத்துலையே உங்களுக்கு புடிச்ச பத்து படம்  எதுன்னு லிஸ்டு போடும் பொது இந்த படமெல்லாம் வந்துச்சா?, அட்லீஸ்ட் புடிக்காத பத்து படம்னு லிஸ்டுளையாவது வந்துச்சா, வராது ஏனா இதெல்லாம் அதுக்கு கூட லாயக்கில்லாத படங்க.

அட்லீஸ்ட் நடிகர் நடிகையர் அவார்டுலயவது கொஞ்சம் நல்ல தேர்வ எதிர் பாக்கலாம் (இதுலயும் விதி விலக்கு ரிக்ஷாக்காரன் MGR, பிதா மகன் விக்ரம்) ஆனா சிறந்த படம் சிறந்த இயக்குனர் ல மட்டும் இப்படிதான் ஒவ்வொரு வருஷமும் படம்ன்குற பேருல நாடகத்த எடுக்குறவங்களுக்கு குடுக்குறாங்க.

 

சாரி பாஸ் இதுக்கு  மேல பொறுமையில்ல

george-bush

A new york tabloid has stolen the Empire state building by producing fake documents with city register, in order to expose the loop holes in system. It has also exposed that how easy it is to transfer the ownership and apply for mortgages. It had taken only 90 minutes for the whole transfer of asset. And the craziest thing is the asset has been registered in the name of Wille Sutton (Legendary bank robber) and Fay Wray (movie star).
It is not a surprise here in India, It always happens.
In another part of world, A chinese man has woke his wife from 10 yr coma by biting her toe. His wife fell into Coma after a head injury in an industrial accident. Zhang tried everything under sun to wake her and failed everytime, Finally he had succeeded by nibbling her toe.
It would have been easy for our heroes, They will do it in a minute by singing a family song.


I was busy on

July 2018
M T W T F S S
« May    
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
3031  

Quote

"Gravitation is not responsible for people falling in love." ---Albert Einstein
"I just want to live while I'm alive" ---Bon Jovi
"Life was like a box of chocolates. You never know what you're gonna get." ---Forrest Gump

Archives

Blog Stats

  • 9,204 hits
Advertisements